Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 150 OTCV

Side by side with the Father's Heart Bible™

1அல்லேலூயா,இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்;அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள்.

2அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.

3எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.

4தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்;கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள்.

5கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்;அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.

6சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.அல்லேலூயா.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]