Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Isaiah 12 IRVTam

Side by side with the Father's Heart Bible™

துதியின் பாடல்கள்

1அக்காலத்திலே நீ சொல்வது:“யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்;நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது;நீர் என்னைத் தேற்றுகிறீர்.

2இதோ, தேவனே என் இரட்சிப்பு;நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்;கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்;அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

3நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்துமகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.

4அக்காலத்திலே நீங்கள் சொல்வது:யெகோவாவை துதியுங்கள்;அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்;அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்;அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள்.

5யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள்,அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்;இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.

6சீயோனில் குடியிருக்கிறவளே,நீ சத்தமிட்டுக் கெம்பீரி;இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]