Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Job 25 IRVTam

Side by side with the Father's Heart Bible™

பில்தாதின் வார்த்தைகள்

1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக:

2“அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது;அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.

3அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ?அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?

4இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி?பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?

5சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது;நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.

6புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]