Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 128 OTCV

Side by side with the Father's Heart Bible™

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும்அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

2உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்;ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும்.

3உன் மனைவி உன் வீட்டிற்குள்கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்;ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல்,உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள்.

4ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன்இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான்.

5யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக;உன் வாழ்நாட்களெல்லாம்எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக.

6நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக;இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]