Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 129 OTCV

Side by side with the Father's Heart Bible™

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்” என்றுஇஸ்ரயேலர் சொல்லட்டும்;

2“என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்,ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை.

3உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது,தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.

4ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்;அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்.”

5சீயோனை வெறுக்கிற அனைவரும்வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும்.

6அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்;அது வளரும் முன்பு வாடிப்போகுமே.

7அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது;அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது.

8வழிப்போக்கர்கள் அவர்களிடம்,“யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்;யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்”என்றும் சொல்லாதிருக்கட்டும்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]