Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 130 OTCV

Side by side with the Father's Heart Bible™

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

2யெகோவாவே, என் குரலைக் கேளும்;இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலைஉமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும்.

3யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால்,யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்?

4ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்யஉம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.

5நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது;அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.

6விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும்,ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும்,என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது.

7இஸ்ரயேலே, உன் நம்பிக்கையை யெகோவாவிலேயே இருப்பதாக;ஏனெனில் யெகோவாவிடத்தில் உடன்படிக்கையின் அன்பும்,அவரிடத்தில் முழுமையான மீட்பும் உண்டு.

8அவர்தாமே இஸ்ரயேலரைஅவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]