Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 15 OTCV

Side by side with the Father's Heart Bible™

தாவீதின் சங்கீதம்.

1யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்?உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்?

2குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள்,நீதியானதைச் செய்கிறவர்கள்,உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்;

3தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள்,தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள்,மற்றவர்களை நிந்திக்காதவர்கள்;

4இழிவானவனை அவமதிப்பவர்கள்,யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களைக் கனம்பண்ணுகிறவர்கள்;ஆணையிட்டதினால் துன்பம் நேரிட்டாலும்மனதை மாற்றாதவர்கள்;

5ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள்,குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள்.இவ்வாறு வாழ்கிறவர்கள்ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]