Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 14 OTCV

Side by side with the Father's Heart Bible™

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1“இறைவன் இல்லை” என்றுமூடன் தன் இருதயத்தில் சொல்கிறான்.அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை;நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

2யெகோவா பரலோகத்திலிருந்துமனுமக்களை நோக்கிப் பார்க்கிறார்,அவர்களில் விவேகமுள்ளவனாவதுஇறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.

3எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்;நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை,ஒருவனாகிலும் இல்லை.

4தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ?மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்;அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை.

5அவர்கள் அங்கே பயத்தில் நடுங்குகிறார்கள்;ஏனெனில் இறைவன் நீதிமான்களின் கூட்டத்தில் இருக்கிறார்.

6தீமை செய்கிறவர்களே, நீங்கள் ஏழைகளின் திட்டங்களைக் குழப்புகிறீர்கள்;ஆனால் யெகோவாவோ ஏழைகளின் தஞ்சம்.

7சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக!யெகோவா தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போதுயாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]