Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Psalms 14 IRVTam

Side by side with the Father's Heart Bible™

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

1தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்;நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார்.

3எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.

4அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ?அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே;அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.

5அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்;தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.

6ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால்,நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.

7சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,யாக்கோபுக்குச் சந்தோஷமும்,இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]