Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 142 OTCV

Side by side with the Father's Heart Bible™

தாவீது குகையிலிருந்தபோது செய்த ஜெபமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம்.

1நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;நான் யெகோவாவிடம் இரக்கம் கேட்டு என் குரலை உயர்த்துகிறேன்.

2அவருக்கு முன்பாக என் குறைகளைக் கொட்டுகிறேன்;என் துன்பத்தையும் அவருக்கு முன்பாக சொல்கிறேன்.

3என் ஆவி எனக்குள் சோர்ந்து போகையில்,நீரே என் வழியை அறிகிறவர்;நான் நடக்கும் பாதையில்மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்.

4நோக்கிப்பாரும், உதவிக்காக என் வலதுபக்கத்தில் யாரும் இல்லை;என்னில் அக்கறை கொள்பவர்கள் யாருமில்லை.எனக்குப் புகலிடம் இல்லை;என்னைக் கவனிக்க எவருமில்லை.

5யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன்;“நீரே என் புகலிடம்,வாழ்வோரின் நாட்டில் நீரே என் பங்கு” என்று நான் சொல்கிறேன்.

6என் கதறலுக்குச் செவிகொடும்;நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்;என்னைப் பிடிக்க பின்தொடர்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்;ஏனெனில் அவர்கள் என்னைவிட பலமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

7நான் உமது பெயரைத் துதிக்கும்படி,என் சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கும்;அப்பொழுது நீர் எனக்குச் செய்யும் நன்மையினிமித்தம்,நீதிமான்கள் என்னைச் சுற்றிச் சேர்ந்துகொள்வார்கள்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]