Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Psalms 6 IRVTam

Side by side with the Father's Heart Bible™

செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

1யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும்,உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.

2என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே,நான் பெலனில்லாமல் போனேன்;என்னைக் குணமாக்கும் யெகோவாவே,என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.

3என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே,எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.

4திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்;உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.

5மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை,பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?

6என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்;இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி,என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.

7துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது,என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.

8அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.

9யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்;யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.

10என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்;அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]