Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 12 OTCV

Side by side with the Father's Heart Bible™

செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1யெகோவாவே, உதவிசெய்யும், இறை பக்தியுள்ளவர் ஒருவருமே இல்லை;மனிதருள் உண்மையுள்ளவர்கள் குறைந்துவிட்டார்கள்.

2ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்;அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசிஇருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள்.

3முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும்பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக.

4“எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்;எங்கள் சொற்களே எங்களுக்குத் துணை; எங்களுக்குத் தலைவர் யார்?”என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.

5“ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.இதினால் நான் இப்பொழுது எழுந்து,அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.

6யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை.அவை களிமண் உலையில்ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன.

7யெகோவாவே, நீர் ஏழைகளாகிய அவர்களைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்;கொடியவர்களிடமிருந்து எங்களை என்றென்றும் காத்துக்கொள்வீர்.

8இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால்கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]