Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 4 OTCV

Side by side with the Father's Heart Bible™

கம்பியிசைக் கருவிகளுடன் பாடப்பட்டு பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1நீதியுள்ள என் இறைவனே,நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும்.என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்;என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும்.

2மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்?எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்?

3யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்;நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார்.

4நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்;நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது,உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள்.

5நீதியான பலிகளைச் செலுத்தி,யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்.

6“எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்;யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும்.

7தானியமும் புதுத் திராட்சை இரசமும்நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிடஅதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர்.

8நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்;ஏனெனில் யெகோவாவே,நீர் மட்டுமே என்னைப் பாதுகாப்பாகக் குடியிருக்கச் செய்கிறீர்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]