Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Psalms 4 IRVTam

Side by side with the Father's Heart Bible™

தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது.

1என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்;நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்;எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும்.

2மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி,வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா)

3பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்;நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார்.

4நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்;உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா)

5நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்.

6எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்;யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும்.

7அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட,அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர்.

8சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்;யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]