Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Psalms 2 IRVTam

Side by side with the Father's Heart Bible™

1தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்?மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்?

2யெகோவாவுக்கு விரோதமாகவும்,அவர் அபிஷேகம்செய்தவருக்கு விரோதமாகவும்,பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று,அதிகாரிகள் ஒன்றாக ஆலோசனைசெய்து:

3அவர்களுடைய கட்டுகளை அறுத்து,அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள்.

4பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்;ஆண்டவர் அவர்களை இகழுவார்.

5அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார்.தமது கடுங்கோபத்திலே அவர்களைக் கலங்கச்செய்வார்.

6நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார்.

7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்;யெகோவா என்னை நோக்கி, நீர் என்னுடைய மகன்,இன்று நான் உம்மை பிறக்கச்செய்தேன்;

8என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும்,பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

9இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி,குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.

10இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள்,பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள்.

11பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்,நடுக்கத்துடனே மகிழ்ந்திருங்கள்.

12தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு,தேவனை முத்தம்செய்யுங்கள்;கொஞ்சக்காலத்திலே தேவனுடைய கோபம் பற்றியெரியும்;அவரிடம் அடைக்கலமாக இருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]