Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 133 OTCV

Side by side with the Father's Heart Bible™

சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.

1இறைவனின் மக்கள் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும்,எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது!

2அது தலையில் ஊற்றப்பட்டு தாடியில் வடிகின்றவிலையேறப்பெற்ற எண்ணெய்போல் இருக்கிறது;ஆரோனின் தாடியில் வடிந்து,அவனுடைய அங்கிகளின் கழுத்துப்பட்டியில் இறங்கும் எண்ணெய்போல் இருக்கிறது.

3எர்மோன் மலையின் பனிசீயோனின் மலைகள்மேல் இறங்குவதைப்போல் அது இருக்கிறது;ஏனெனில் அங்கே யெகோவா தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்;வாழ்வையும் என்றென்றைக்கும் வழங்குகிறார்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]