Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 138 OTCV

Side by side with the Father's Heart Bible™

தாவீதின் சங்கீதம்.

1யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;“தெய்வங்கள்” முன்னிலையில் நான் உமக்குத் துதி பாடுவேன்.

2நான் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பணிந்து,உமது உடன்படிக்கையின் அன்புக்காகவும் உம்முடைய சத்தியத்திற்காகவும்,உமது பெயரைத் துதிப்பேன்;ஏனெனில் எல்லாக் காரியங்களுக்கும் மேலாகஉமது பெயரையும், உமது வார்த்தையையும் உயர்த்தியிருக்கிறீர்.

3நான் கூப்பிட்டபோது நீர் எனக்குப் பதில் கொடுத்தீர்;நீர் என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை மிகவும் தைரியப்படுத்தினீர்.

4யெகோவாவே, பூமியின் அரசர்கள் எல்லோரும்உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிக்கட்டும்.

5யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.

6யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,தாழ்மையுள்ளவர்களை அக்கறையுடன் நோக்கிப் பார்க்கிறார்;ஆனால் பெருமையுள்ளவர்களையோ அவர் தூரத்திலிருந்தே அறிகிறார்.

7துன்பத்தின் மத்தியிலே நான் நடக்கின்றபோதிலும்,நீர் என் உயிரைப் பாதுகாக்கிறீர்.என் பகைவரின் கோபத்திற்கு எதிராக நீர் உமது கையை நீட்டுகிறீர்;உமது வலதுகரத்தினால் என்னைக் காப்பாற்றுகிறீர்.

8யெகோவா என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்;யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது;உமது கரத்தின் செயல்களைக் கைவிடாதேயும்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]