Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 147 OTCV

Side by side with the Father's Heart Bible™

1யெகோவாவைத் துதியுங்கள்.நமது இறைவனுக்குத் துதிகளைப் பாடுவது எவ்வளவு நல்லது,அவரைத் துதிப்பது எவ்வளவு மகிழ்ச்சியும் தகுதியுமாயிருக்கிறது.

2யெகோவா எருசலேமைக் கட்டியெழுப்புகிறார்;அவர் நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரை ஒன்றுசேர்க்கிறார்.

3அவர் உள்ளம் உடைந்தவர்களைச் சுகப்படுத்தி,அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

4அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,அவை ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறார்.

5நம்முடைய யெகோவா பெரியவரும், வல்லமை மிகுந்தவருமாய் இருக்கிறார்;அவருடைய அறிவுக்கு எல்லையே இல்லை.

6யெகோவா தாழ்மையுள்ளவர்களை ஆதரிக்கிறார்;ஆனால் கொடியவர்களையோ தரையில் வீழ்த்துகிறார்.

7யெகோவாவை நன்றியுடன் துதி பாடுங்கள்;யாழினால் நம் இறைவனுக்கு இசை மீட்டுங்கள்.

8அவர் ஆகாயத்தை மேகங்களினால் மூடுகிறார்;பூமிக்கு மழையைக் கொடுத்து,மலைகளில் புல்லை வளரப்பண்ணுகிறார்.

9மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும்அவர் உணவு கொடுக்கிறார்.

10குதிரையின் பலத்தில் அவர் பிரியம் கொள்வதில்லை,படைவீரனின் கால் வலிமையில் அவர் மகிழ்ச்சி அடைவதுமில்லை;

11யெகோவா தமக்குப் பயந்து,தங்கள் நம்பிக்கையை அவருடைய உடன்படிக்கையின் அன்பில்வைத்திருக்கிறவர்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்.

12எருசலேமே யெகோவாவைப் பாராட்டு;சீயோனே உன் இறைவனைத் துதி.

13ஏனெனில் அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,உன்னிடத்திலுள்ள உன் மக்களை ஆசீர்வதிக்கிறார்.

14அவர் உன் எல்லைகளுக்குச் சமாதானத்தைக் கொடுத்து,சிறந்த கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

15அவர் பூமிக்குத் தமது கட்டளையை அனுப்புகிறார்;அவருடைய வார்த்தை விரைந்து செல்கிறது.

16அவர் மூடுபனியை கம்பளியைப்போல் பரப்புகிறார்;உறைபனித் துகள்களை சாம்பலைப்போல் தூவுகிறார்.

17அவர் தமது பனிக்கட்டி மழையை சிறு கற்களைப்போல் வீசியெறிகிறார்;அவருடைய பனியின் குளிர்காற்றை யாரால் தாங்கமுடியும்?

18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;அவர் தமது தென்றல் காற்றுகளை வீசச்செய்ய, வெள்ளம் ஓடுகிறது.

19அவர் தமது வார்த்தையை யாக்கோபுக்கும்,தமது சட்டங்களையும் விதிமுறைகளையும் இஸ்ரயேலுக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

20அவர் இப்படி வேறு எந்த மக்களுக்கும் வெளிப்படுத்தவில்லை;அவர்கள் அவருடைய சட்டங்களை அறியாதிருக்கிறார்கள்.யெகோவாவைத் துதி.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]