Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 21 OTCV

Side by side with the Father's Heart Bible™

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார்.நீர் கொடுக்கும் வெற்றிகளில் அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது.

2அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்;அவருடைய உதடுகளின் வேண்டுதலை நீர் புறக்கணிக்கவில்லை.

3நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று,சுத்தத் தங்கத்தினாலான மகுடத்தை நீர் அவர் தலையின்மேல் வைத்தீர்.

4அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்;அவர் என்றென்றும் வாழ, நீடித்த ஆயுளைக் கொடுத்தீர்.

5நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது;நீர் அவரை மகிமையாலும் மகத்துவத்தாலும் நிரப்பியிருக்கிறீர்.

6நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்;உமது சமுகத்தின் ஆனந்தத்தால், அவரை மகிழ்ச்சியாக்கினீர்.

7ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்;உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம்அவர் அசைக்கப்படமாட்டார்.

8உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்;உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும்.

9நீர் வரும் நேரத்தில்அவர்களை ஒரு நெருப்புச் சூளையைப்போல் ஆக்கிவிடுவீர்.யெகோவா தமது கடுங்கோபத்தில் அவர்களை அழித்துவிடுவார்;அவருடைய நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்.

10நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர்,அவர்களுடைய சந்ததிகளை மனுக்குலத்திலிருந்து அழிப்பீர்.

11உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள்,பொல்லாத சதித்திட்டங்களை வகுத்தார்கள்; ஆனாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது.

12நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது,அவர்களை புறமுதுகு காட்டப்பண்ணுவீர்.

13யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக;நாங்கள் உமது வல்லமையைப் பாடித் துதிப்போம்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]