Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Psalms 21 IRVTam

Side by side with the Father's Heart Bible™

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

1யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்;உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்!

2அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி,அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா)

3உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து,அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர்.

4அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்;நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர்.

5உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது;மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர்.

6அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்;அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.

7ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்;உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார்.

8உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்;உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.

9உமது கோபத்தின் காலத்திலேஅவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்;யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்;நெருப்பு அவர்களை அழிக்கும்.

10அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும்அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர்.

11அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்;தீவினை செய்ய முயன்றார்கள்;ஒன்றும் வாய்க்காமல்போனது.

12உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர்.

13யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்;அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]