Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Psalms 136 OTCV

Side by side with the Father's Heart Bible™

1யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்,அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

2தெய்வங்களின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்,அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

3கர்த்தாதி யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள்,அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

4அவர் மட்டுமே பெரிய அதிசயங்களைச் செய்கிறவர்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

5அவர் தமது அறிவாற்றலினால் வானங்களைப் படைத்தார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

6அவர் நீர்நிலைகளுக்கு மேலாகப் பூமியைப் பரப்பினார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

7அவர் பெரிய வெளிச்சங்களை உண்டாக்கினார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

8அவர் பகலை ஆளச் சூரியனைப் படைத்தார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

9இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

10அவர் எகிப்தியருடைய தலைப்பிள்ளைகளை வீழ்த்தினார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

11அவர்கள் மத்தியிலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவந்தார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

12அவர் வல்லமையுள்ள கரத்தினாலும் நீட்டிய புயத்தினாலும் அதைச் செய்தார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

13செங்கடலை இரண்டாகப் பிரித்தவருக்கு நன்றி செலுத்துங்கள்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

14அவர் அதின் நடுவில் இஸ்ரயேலரைக் கொண்டுவந்தார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

15ஆனால் பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் புரட்டித்தள்ளினார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

16தம்முடைய மக்களை பாலைவனத்தில் வழிநடத்தினவருக்கு நன்றி செலுத்துங்கள்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

17அவர் பெரிய அரசர்களை வீழ்த்தியவருக்கு நன்றி செலுத்துங்கள்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

18அவர் வலிமைமிக்க அரசர்களை வீழ்த்தினார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

19அவர் எமோரியரின் அரசனாகிய சீகோனை வீழ்த்தினார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

20அவர் பாசானின் அரசனாகிய ஓகை வீழ்த்தினார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

21அவர் அவர்களுடைய நாட்டை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

22தமது அடியவனாகிய இஸ்ரயேலுக்கு அதை உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

23அவர் நம்முடைய தாழ்ந்த நிலையில் நம்மை நினைத்தார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

24நம்முடைய பகைவரிடமிருந்து நம்மை விடுவித்தார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

25அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணவு கொடுக்கிறார்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

26பரலோகத்தின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்;அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]