Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Psalms 16 IRVTam

Side by side with the Father's Heart Bible™

தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்.

1தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.

2என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி:தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர்,என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்;

3பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும்,நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும்,அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய்.

4அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்;அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன்,அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.

5யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்;என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர்.

6நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது;ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு.

7எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்;இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும்.

8யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்;அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால்நான் அசைக்கப்படுவதில்லை.

9ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து;என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்.

10என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்;உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை.

11வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்;உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும்,உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]