Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Psalms 10 IRVTam

Side by side with the Father's Heart Bible™

1யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்?துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?

2துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால்ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்;அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.

3துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான்,பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான்.

4துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்;அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.

5அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்;உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன;தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான்.

6நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லைஎன்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

7அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும்,கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது;அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.

8கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து,மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்;திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.

9தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்;ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.

10திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.

11தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து,எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்;தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.

12யெகோவாவே, எழுந்தருளும்;தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்;ஏழைகளை மறக்காமலிரும்.

13துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து,நீர் கேட்டு விசாரிப்பதில்லை;என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்?

14அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும்,துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே;நீர் பதிலளிப்பீர்;ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்;திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.

15துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்;அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.

16யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்;அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.

17யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்;அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர்.

18மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல்,தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும்ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்யஉம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]