Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Proverbs 9 IRVTam

Side by side with the Father's Heart Bible™

ஞானி மற்றும் பேதையர்களுக்கான அழைப்பு

1ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி,தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து,

2தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து,திராட்சைரசத்தை ஊற்றிவைத்து,தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி,

3தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி,பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,

4புத்தியீனனை நோக்கி:எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும்.

5நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு,நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள்.

6பேதமையைவிட்டு விலகுங்கள்,அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்;புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது.

7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்;துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.

8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே,அவன் உன்னைப் பகைப்பான்;ஞானமுள்ளவனைக் கடிந்துகொள்,அவன் உன்னை நேசிப்பான்.

9ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்;நீதிமானுக்கு உபதேசம் செய்,அவன் அறிவில் விருத்தியடைவான்.

10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;பரிசுத்த தேவனின் அறிவே அறிவு.

11என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்;ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.

12நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்;நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.

13மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள்.

14அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து,

15தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து:

16எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும்,

17மதியீனனை நோக்கி:திருட்டுத்தண்ணீர் தித்திக்கும்,மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.

18இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும்,அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான்.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]