Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Proverbs 29 IRVTam

Side by side with the Father's Heart Bible™

ஞானத்தின் போதனை

1அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன்உதவியின்றி திடீரென்று நாசமடைவான்.

2நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்;துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள்.

3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனைசந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான்.

4நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்;லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான்.

5பிறனை முகஸ்துதி செய்கிறவன்,அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான்.

6துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது;நீதிமானோ பாடி மகிழுகிறான்.

7நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்;துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான்.

8பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்;ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள்.

9ஞானி மூடனுடன் வழக்காடும்போது,கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை.

10இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்;செம்மையானவர்களோ அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்கள்.

11மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்;ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.

12அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால்,அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள்.

13தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்;அந்த இருவருடைய கண்களுக்கும் யெகோவா வெளிச்சம் கொடுக்கிறார்.

14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம்என்றும் நிலைபெற்றிருக்கும்.

15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்;தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோதன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான்.

16துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்;நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.

17உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான்,உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.

18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்;வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.

19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்;அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான்.

20தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால்,அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம்.

21ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால்,முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான்.

22கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்;கடுங்கோபி பெரும்பாதகன்.

23மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்;மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான்.

24திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்;சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.

25மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்;யெகோவாவை நம்புகிறவனோஉயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

26ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்;ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும்.

27நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்;சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]