Skip to content
The Believer's Library

Indian Revised Version (IRV) Tamil - 2019

Proverbs 19 IRVTam

Side by side with the Father's Heart Bible™

ஞானம் நன்மைகளின் ஊற்று

1மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட,உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன்.

2ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல;கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.

3மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்;என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.

4செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்;தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.

5பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்;பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.

6பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்;கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.

7தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே,எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்;அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான்,அவைகளோ வெறும் வார்த்தைகளே.

8ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்;புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.

9பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்;பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.

10மூடனுக்குச் செல்வம் தகாது;பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.

11மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்;குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்;அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.

13மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்;மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.

14வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து;புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.

15சோம்பல் தூங்கிவிழச்செய்யும்;அசதியானவன் பட்டினியாக இருப்பான்.

16கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்;தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.

17ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்;அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

18நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி;ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.

19கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்;நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.

20உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி,ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.

21மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்;ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.

22நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு;பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.

23யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது;அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்;தீமை அவனை அணுகாது.

24சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து,அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.

25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்;புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.

26தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன்,வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.

27என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும்போதகங்களை நீ கேட்காதே.

28அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்;துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.

29பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும்,மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.

TAM-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Indian Revised Version (IRV) Tamil - 2019 · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]