Skip to content
The Believer's Library

Biblica® Open Indian Tamil Contemporary Version

Isaiah 3 OTCV

Side by side with the Father's Heart Bible™

யூதா, எருசலேம் நியாயத்தீர்ப்பு

1இப்பொழுது பாருங்கள், யெகோவா,சேனைகளின் யெகோவாஎருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும்எல்லா ஆதரவையும் உதவியையும் நிறுத்தப் போகிறார்:உணவு வழங்குவதையும், தண்ணீர் வழங்குவதையும் நிறுத்தப் போகிறார்.

2மாவீரனையும், போர்வீரனையும்,நீதிபதியையும், இறைவாக்கினனையும்,குறிசொல்பவனையும், சபைத்தலைவனையும்,

3ஐம்பது பேருக்குத் தலைவனையும், மதிப்புள்ளவனையும், ஆலோசகனையும்,தொழிலில் சாமர்த்தியமுள்ளவனையும்,மாயவித்தையில் கெட்டிக்காரனையும் அகற்றப்போகிறார்.

4“நான் வாலிபர்களை அவர்களுடைய அதிகாரிகளாக்குவேன்;விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை ஆட்சிசெய்வார்கள்.”

5மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள்:ஒருவருக்கொருவரும், அயலானுக்கு விரோதமாக அயலானும்,இளையோர் முதியோருக்கு விரோதமாகவும்,கீழோர் மேலோருக்கு விரோதமாகவும் எழும்புவார்கள்.

6ஒருவன் தன் தகப்பன் வீட்டிலுள்ள தன் சகோதரன் ஒருவனைப் பிடித்து,“உன்னிடம் மேலுடை இருக்கிறது;நீயே எங்களுக்குத் தலைவனாயிரு.பாழடைந்த இவ்விடத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும்” என்று சொல்வான்.

7ஆனால் அவனோ அந்நாளில்,“என் வீட்டில் உணவோ, உடையோ கிடையாது;இதற்கு எந்தவிதத் தீர்வும் என்னிடம் இல்லை.என்னை மக்களுக்குத் தலைவனாக்காதே” என்று மறுத்துவிடுவான்.

8எருசலேம் நகரம் தள்ளாடுகிறது,யூதா நாடு வீழ்ச்சியடைகிறது;அவர்களின் சொல்லும் செயலும் யெகோவாவுக்கு விரோதமாக இருக்கிறது,அவர்கள் அவரின் மகிமையான சமுகத்தை துணிவுடன் எதிர்க்கிறார்கள்.

9அவர்களுடைய முகங்களின் தோற்றம் அவர்களுக்கெதிராக சாட்சி பகர்கிறது;சோதோம் நகரத்தைப்போல தங்கள் பாவங்களைப் பறைசாற்றுகிறார்கள்.அவைகளை மறைத்து வைக்கவில்லை.ஐயோ! அவர்களுக்குக் கேடு;அவர்கள் தங்களுக்குத் தாங்களே பேராபத்தை வருவித்துக் கொண்டார்கள்.

10நீதியானவர்களுக்கு எல்லாம் நலமாய் நடைபெறும்என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்;ஏனெனில் அவர்கள், தமது செயல்களின் பலனை அனுபவிப்பார்கள்.

11கொடியவர்களுக்கு ஐயோ கேடு!அவர்கள்மேல் பேராபத்து வரும்.அவர்களின் கைகளின் செயல்களுக்கு ஏற்றவாறுஅவர்களுக்குச் செய்யப்படும்.

12வாலிபர் என் மக்களை ஒடுக்குகிறார்கள்,பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள்.எனது மக்களே, உங்கள் வழிகாட்டிகள் உங்களைத் தவறான வழியில் நடத்துகிறார்கள்;அவர்கள் உங்களை வழிவிலகிப்போகச் செய்கிறார்கள்.

13யெகோவா வழக்காட ஆயத்தமாகி,மக்களை நியாயந்தீர்க்க எழுந்து நிற்கிறார்.

14யெகோவா தமது மக்களின் முதியோருக்கும், தலைவருக்கும்விரோதமாய் நியாயத்தீர்ப்பு செய்கிறார்.“என் திராட்சைத் தோட்டத்தைப் பாழாக்கியவர்கள் நீங்களே;எளியவர்களிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்கள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.

15நீங்கள் என் மக்களை நொறுக்குவதன் அர்த்தமென்ன?ஏழைகளின் முகத்தை உருக்குலைப்பதின் பொருள் என்ன?”என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.

16மேலும் யெகோவா சொன்னதாவது:“சீயோனின் பெண்களோ கர்வம் கொண்டிருக்கிறார்கள்;தங்கள் கழுத்தை வளைக்காது அகங்காரமாய் நடக்கிறார்கள்,அவர்கள் தங்கள் கண்களினால் மருட்டுகிறார்கள்.அவர்கள் தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கஒய்யாரமாய் நடந்து திரிகிறார்கள்.

17ஆகையால் யெகோவா சீயோனின் பெண்களின் தலையைப் புண்களால் வாதிப்பார்;அவர்களின் தலைகளை யெகோவா வழுக்கையாக்குவார்.”

18அந்த நாளிலே யெகோவா அவர்களின் பகட்டான அணிகலன்களாகிய வளையல்கள், தலைப்பட்டிகள், பிறை வடிவமான கழுத்துச் சங்கிலிகள், 19காதணிகள், கைச்சங்கிலிகள், முகத்திரைகள் 20தலை அணிகலன்கள், கால் சிலம்புகள், ஒட்டியாணங்கள், வாசனைத் தைலக்குப்பிகள், தாயித்துகள், 21மோதிரங்கள், மூக்குத்திகள்; 22உயர்தர அங்கிகள், மேலுடைகள், போர்வைகள், கைப்பைகள், 23கண்ணாடிகள், நல்லரக உடைகள், மணிமுடிகள், சால்வைகள் ஆகியவற்றைப் பறித்துப் போடுவார்.

24அப்பொழுது நறுமணத்திற்குப் பதிலாகத் துர்நாற்றம் உண்டாகும்;ஒட்டியாணம் இருக்கும் இடத்தில் கயிறு கட்டப்படும்.அழகாய் முடிக்கப்பட்ட கூந்தல் இல்லாதுபோய், அது வழுக்கைத் தலையாய் இருக்கும்;அலங்கார உடைக்குப் பதிலாக அவர்கள் துக்கவுடையை உடுத்திக்கொள்வார்கள்;அழகுக்குப் பதிலாக அடிமைகளின் நெருப்புச்சூட்டுத் தழும்பு அவர்களுக்கு இருக்கும்.

25உங்கள் மனிதர்கள் வாளுக்கு இரையாவார்கள்;உங்களின் இராணுவவீரர் போர்க்களத்தில் சாவார்கள்.

26சீயோனின் வாசல்கள் ஒப்பாரி வைத்துப் புலம்பும்;அவள் ஆதரவற்றவளாகத் தரையில் உட்காருவாள் என்கிறார்.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு™ பதிப்புரிமை © 2005, 2020, 2022 Biblica, Inc. Biblica® Open Indian Tamil Contemporary Version™ Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc.
Biblica® Open Indian Tamil Contemporary Version · Creative Commons - Attribution-ShareAlike [CC BY-SA]